பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 07th January 2019 01:22 AM | Last Updated : 07th January 2019 01:22 AM | அ+அ அ- |

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர் எஸ்.கே.அருண்ராஜ் 700-க்கு 693 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கணினித் துறையில் எம்.வினிதா, இஇஇ துறையில் எஸ்.யோகேஷ், இசிஇ பிரிவில் ஆர்.கணேஷ்குமார், கட்டடவியல் பிரிவில் ஹெச்.முகமது அனீஸ், கட்டடவியல் முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.முஹமது ஜாகித் ஆகியோர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அரசு வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே.குப்புசாமி, பொருளாளர் பி.பாலகிருஷ்ணன், செயலாளர் ஜி.செல்வகுமார், முதல்வர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் கல்லூரி இயக்குநர்கள் பாராட்டினர்.