கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:57 AM | Last Updated : 03rd July 2019 07:57 AM | அ+அ அ- |

பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் சங்க அரக்கோணம் வட்டக் கிளைத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். செயலர் லட்சுமிநாராயணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோருதல், இணையவழி அடங்கல் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தல், மடிக்கணினி வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.