ஜூன் 13 முதல் குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
By DIN | Published On : 09th June 2019 12:19 AM | Last Updated : 09th June 2019 12:19 AM | அ+அ அ- |

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கு ஜூலை 14-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வை எழுதுவோருக்கான இலவசப் பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் நடத்தப்பட உள்ளது.
சிறந்த பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.