வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர்.
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக அசோகன் பணியாற்றினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையைச் சேர்ந்த 3 போலீஸார் புதன்கிழமை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 2015-ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.