பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சீர்
By DIN | Published On : 06th March 2019 11:50 PM | Last Updated : 06th March 2019 11:50 PM | அ+அ அ- |

ஆற்காட்டை அடுத்த தோப்புகானா நகராட்சி (தெற்கு ) உயர்நிலைப் பள்ளிக்கு கல்விச் சீர் பொருள்களை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். விழாவில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு பீரோ, நாற்காலி, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில்...
ஸ்ரீராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், மகா சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட எழுது பொருள்களை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கும் விழா மாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிவன்-சக்தி திரையரங்க உரிமையாளர் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன், உறுப்பினர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வித்யாபீடம் பாரதி முரளிதரசுவாமிகள், ஆற்காடு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தாஜ்புரா எம்.குட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.சிகாமணி ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி எழுதுபொருள்களை வழங்கிப் பேசினர்.