அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 22nd March 2019 07:53 AM | Last Updated : 22nd March 2019 07:53 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஜோலார்பேட்டை அருகே நாட்டறம்பள்ளி பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக நகரச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவு அமைச்சர் கே.சி.வீரமணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி பேசினார்.
கூட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...