ஆம்பூர் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படாததால் அரசியல் கட்சியினர் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆம்பூர் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்து, ரொக்கக் கையிருப்பு, கடன், வழக்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மாலையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர், கட்சி, முன்மொழிந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரம், சொத்து, ரொக்கக் கையிருப்பு, கடன், வழக்கு சம்பந்தமான பல்வேறு தகவல்களின் நகல் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படுவது வழக்கம்.
இதில் தவறான தகவல்கள் தெரிவித்திருந்தால் அது
குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு பரிசீலனையின் போது ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதே போல பொதுமக்களும் அந்த தகவல்களைப் பார்வையிடலாம்.
ஆனால் ஆம்பூரில் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம், சொத்து, கடன், ரொக்க கையிருப்பு, கடன், வழக்கு சம்பந்தமான தகவல்களின் நகல்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படவில்லை.
அதனால் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதே போல ஆம்பூர் நகரில் அண்ணா, எம்ஜிஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளும் மூடப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.