திருமலையில் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேர் கைது

திருமலைக்கு வரும் பக்தர்களிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேரை போலீஸார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்தனர்.
Updated on
1 min read

திருமலைக்கு வரும் பக்தர்களிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேரை போலீஸார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்தனர்.
திருமலையில் பக்தர்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நன்றாக உடை உடுத்திக் கொண்டு, தங்களை வசதியானவர்களாகக் காட்டிக்கொண்டு தங்களின் பணம் முதலியவை திருடுபோனதாகக் கூறி, நூதன முறையில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை திருமலை போலீஸார் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் புதன்கிழமை கைது செய்தனர். இவர்கள் பக்தர்களிடம் அப்பாவி போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
முதல்கட்ட விசாரணையில், இவர்கள் 4 பேரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிழைப்புக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மற்ற விவரங்கள் முழு விசாரணைக்கு பின் வெளியிடப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com