தேர்தல் பாதுகாப்புப் பணி: வேலூருக்கு 80 சிறப்புக் காவலர் படையினர் வருகை
By DIN | Published On : 28th March 2019 06:05 AM | Last Updated : 28th March 2019 06:05 AM | அ+அ அ- |

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சென்னையிலிருந்து வேலூருக்கு முதல்கட்டமாக சிறப்புக் காவல் படையினர் 80 பேர் வருகை புரிந்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே, தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 80 பேர் வேலூருக்கு புதன்கிழமை வருகை புரிந்துள்ளனர். இவர்கள் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகள், மக்கள் கூடும் முக்கிய இடங்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் ஆகியவற்றிலும், தேர்தல் நாளன்று (ஏப்ரல் 18) வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...