வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்
By DIN | Published On : 28th March 2019 06:04 AM | Last Updated : 28th March 2019 06:04 AM | அ+அ அ- |

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, 8-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்டனர். அதை அப்பகுதி மக்கள் பார்த்துச் சென்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...