வேலூரில் டிடிவி தினகரன் நாளை பிரசாரம்
By DIN | Published On : 28th March 2019 06:06 AM | Last Updated : 28th March 2019 06:06 AM | அ+அ அ- |

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகள், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதன்படி, காவேரிப்பாக்கத்தில் மாலை 3 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், 4 மணிக்கு வாலாஜாபேட்டை, 4.15 மணிக்கு ராணிப்பேட்டை (முத்துக்கடை), 4.30 மணிக்கு ஆற்காடு (அண்ணா சிலை பேருந்து நிலையம்), 5 மணிக்கு விஷாரம் பேருந்து நிலையம், 5.30 மணிக்கு வேலூர், 6 மணிக்கு காட்பாடி (சித்தூர் பேருந்து நிலையம்), 6.30 மணிக்கு கே.வி.குப்பம் பேருந்து நிலையம், இரவு 7 மணிக்கு குடியாத்தம் பேருந்து நிலையம், 7.30 மணிக்கு பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம், 8 மணிக்கு ஆம்பூர் (பஜார்), 8.30 மணிக்கு மாதனூர் பேருந்து நிலையம், 9 மணிக்கு வாணியம்பாடி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...