கார் கவிழ்ந்து 5 பேர் காயம்
By DIN | Published On : 30th March 2019 11:54 PM | Last Updated : 30th March 2019 11:54 PM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 5 படுகாயமடைந்தனர்.
பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (50). வியாபாரி. அவரது மனைவி பிரேமா(49) மற்றும் உறவினர்களான ஜெர்சி(53), ரீனா(30), லினி (23) உட்பட 8 பேர் பெங்களூரில் இருந்து சனிக்கிழமை காலை காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ராஜா ஓட்டி வந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே இருந்த இரும்புத் தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார், விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...