குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர், ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
குடியாத்தம் ரயில் நிலையம் அருகே, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வியாழக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், இறந்த முதியவரின் சடலத்தை மீட்டு,வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.