ராணுவ மரியாதையுடன்கடற்படை வீரர் உடல் அடக்கம்
By DIN | Published On : 30th March 2019 11:53 PM | Last Updated : 30th March 2019 11:53 PM | அ+அ அ- |

பயிற்சியின்போது இறந்த கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கடற்படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூரைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் மோகன்ராஜ்(22). கடற்படை வீரரான அவர் மும்பையில் ஐ.என்.எஸ். கோமதி என்ற கப்பலில் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை கப்பலில் நடந்த பயிற்சியின்போது பலத்த காயமடைந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இறந்தார். அவரது உடல் மாச்சனூருக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...