வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு: குடியாத்தம் திமுக வேட்பாளர்
By DIN | Published On : 30th March 2019 11:54 PM | Last Updated : 30th March 2019 11:54 PM | அ+அ அ- |

குடியாத்தம் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் குடியாத்தம் நகரில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
விநாயகபுரம் இணைப்புச் சாலையில் தொடங்கி, வைதீஸ்வரன் நகர், செதுக்கரை, அசோக் நகர், கொண்டசமுத்திரம், பலமநேர் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சுண்ணாம்புபேட்டை, தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார், கூடநகரம் சாலை, காமாட்சியம்மன்பேட்டை, மேல்பட்டி சாலை, செருவங்கி உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.
திமுக நகரப் பொறுப்பாளர் எஸ். சௌந்தரராஜன், அவைத் தலைவர் க.கோ.நெடுஞ்செழியன், மாவட்ட மாணவரணிச் செயலர் ம.மனோஜ், பேச்சாளர்கள் த.பாரி, த.புவியரசி, பெ.கோட்டீஸ்வரன், முன்னாள் நகரச் செயலர் மா.விவேகானந்தன், அர்ச்சனா நவீன், எம்.எஸ். அமர்நாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலர் கே. குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. காத்தவராயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆம்பூரில் திமுக வேட்பாளர்
ஆம்பூர், மார்ச் 30: ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியில் திமுக வேட்பாளர் அ.செ. வில்வநாதன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து மோட்டுக்கொல்லை, பஜார், ஏ-கஸ்பா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
ஆம்பூர் நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம், முன்னாள் நகரச் செயலர் ஆர்.எஸ்.ஆனந்தன், ஆசிரியர் சி.குணசேகரன், நிர்வாகிகள் சாமுவேல் செல்லபாண்டியன், நாகராஜன், ரபீக் அஹமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...