அக்னி வசந்த விழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
By DIN | Published On : 05th May 2019 11:54 PM | Last Updated : 05th May 2019 11:54 PM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. மகாபாரதப் போரில் துரியோதனனை பீமன் வீழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.