வேலூரில் திடீர் மழை
By DIN | Published On : 05th May 2019 11:52 PM | Last Updated : 05th May 2019 11:52 PM | அ+அ அ- |

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கியதில் இருந்து வேலூரில் அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவானது. சாலையில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை மிதமான மழை பெய்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...