திருப்பதி மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
By DIN | Published On : 15th May 2019 07:11 AM | Last Updated : 15th May 2019 07:11 AM | அ+அ அ- |

திருப்பதி மலைப்பாதையில் ஆந்திர அரசுப் பேருந்து கவிழ்ந்ததில், அதில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு இரண்டாம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற ஒரு காரின் மீது மோதி சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. மரங்கள் இடையில் இருந்ததால் பேருந்து அந்தரத்தில் தொங்கியது.
இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 10 பயணிகள் காயமடைந்தனர். இதைக் கண்ட மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் விரைந்து சென்று பேருந்திலிருந்த பயணிகளை மீட்டனர். காயமடைந்தவர்கள் திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.