மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
By DIN | Published On : 15th May 2019 07:13 AM | Last Updated : 15th May 2019 07:13 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
தணிகைபோளூரைச் சேர்ந்த பாலாஜியின் மகன் தினேஷ் (6). அங்குள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த மின்கம்பத்தில் தினேஷ் கை வைத்தாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினேஷ் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.