விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது
By DIN | Published On : 15th May 2019 07:13 AM | Last Updated : 15th May 2019 07:13 AM | அ+அ அ- |

ஜோலார்பேட்டை அருகே பைக் மீது லாரியை மோதி ஒருவர் உயிரிழக்கக் காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் விஜயன்(21). தொழிலாளியான அவர் கடந்த 10-ஆம் தேதி திருப்பத்தூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை நகர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயன் அதே இடத்தில் இறந்தார்.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநரைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருணாநிதியை(42) அவர்கள் கைது செய்தனர்.