குடிநீர் கேட்டு சாலைமறியல்
By DIN | Published On : 19th May 2019 03:32 AM | Last Updated : 19th May 2019 03:32 AM | அ+அ அ- |

சோளிங்கர் அருகே கிராம மக்கள் சீரான குடிநீர் விநியோகம் கோரி சனிக்கிழமை திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
பஞ்சதண்டநாதபுரத்தில் கடந்த இரு மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாம். இதனால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் வாகனத்தில் சென்று குடிநீர் எடுத்து வருகிறார்களாம். சோளிங்கர் பேரூராட்சிப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பஞ்சதண்டநாதபுரம் கிராம மக்கள், சனிக்கிழமை திடீரென சோளிங்கர் கிழக்கு பஜார் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு விரைந்த சோளிங்கர் போலீஸார், பொதுமக்களை சமாதானப்படுத்தியதை அடுத்து சுமார் அரைமணி நேரத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது.