புத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி விழா
By DIN | Published On : 19th May 2019 03:33 AM | Last Updated : 19th May 2019 03:33 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே புத்துக்கோயிலில் உள்ள முத்துமாரி அம்மனின் 61-ஆம் ஆண்டு வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 8 மணிக்கு கரக ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் அம்மன் சந்நிதியை அடைந்தது. காலை முதல் மாலை வரை வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்து 50-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நையாண்டி மேளம், பம்பை மற்றும் சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாலை 6 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவைத் தொடர்ந்து இசைக் கச்சேரியும் நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.