பூப்பல்லக்கு ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: 2 பேர் காயம்
By DIN | Published On : 19th May 2019 03:36 AM | Last Updated : 19th May 2019 03:36 AM | அ+அ அ- |

குடியாத்தத்தில் நடைபெற்ற பூப்பல்லக்கு ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு பூப்பல்லக்குகள் பவனி வந்தன. ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, ஊர்வலத்தில் வந்த கோபலாபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் கீர்த்தி (35), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன்கள் சரவணன், அருண், கார்த்தி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், காயமடைந்த கீர்த்தி வேலூர் தனியார் மருத்துவமனையிலும், சரவணன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நகர போலீஸார் கார்த்தியை கைது செய்தனர்.