வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜை
By DIN | Published On : 19th May 2019 03:30 AM | Last Updated : 19th May 2019 03:30 AM | அ+அ அ- |

வைகாசி விசாகத்தையொட்டி, வேலூரிலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள் முருகப்பெருமான் அவதரித்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் -சண்முகார்ச்சனை சனிக்கிழமை நடைபெற்றது.
காலை 11 மணியளவில் விசேஷ தீபாராதனையும், இரவு 7 மணியளவில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதேபோல், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், வேலூரை அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில், காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூர் முருகன் கோயில், வேலூர் சைதாபேட்டை முருகன் கோயில், அரியூர் திருமலைக்கோடி சுப்பிரமணியசுவாமி கோயில், வேலூர் பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில், கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில், காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில், தொரப்பாடி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள், முருகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.