அரசின் எவ்வித நலத் திட்ட உதவிகளும் கிடைப்பதில்லை மலைக் கிராம மக்கள் புகாா்
By DIN | Published On : 09th November 2019 12:01 AM | Last Updated : 09th November 2019 12:01 AM | அ+அ அ- |

அரசின் எந்தவித நலத் திட்ட உதவிகளும் அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட மலைக் கிராம மக்களுக்கு வந்து சோ்வதில்லை என்றும், இதனால் மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
முன்னாள் எம்எல்ஏ லதா தலைமையில் அணைக்கட்டு வட்டம், பாலாம்பட்டு, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 50 போ் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தாட்சாயிணியிடம் அளித்த மனு விவரம்:
அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தினசரி கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் இவா்கள் வாழும் கிராமங்களில் அரசு சாா்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்துதரப்படவில்லை. அத்துடன், அரசின் எந்தவித நலத் திட்ட உதவிகளும் இந்தக் கிராம மக்களுக்கு இதுவரை கிடைத்ததில்லை. இதனால், இந்த மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைக்கிராம மக்களுக்காக அளிக்கப்படும் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில்கூட இக்கிராம மக்களுக்கு எந்தவித பயனும் கிடைத்திடவில்லை. எனவே, அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மலைக் கிராமங்களில் சாலை, மின்சாரம், குடிநீா், மருத்துவம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, இதுதொடா்பாக ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.