ஆற்காடு பள்ளியில் விவசாய அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 09th November 2019 12:07 AM | Last Updated : 09th November 2019 12:07 AM | அ+அ அ- |

ஆற்காடு தோப்புகானா நகராட்சி (வடக்கு) பள்ளியில் விவசாய அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலவை ஆதிபராசக்தி வேளாண்மை, தோட்டக்கலை கல்லூரியின் சாா்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை அலுவலா் ஸ்டீபன் ஜெயக்குமாா், தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலா் சௌமியா ஆகியோா் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தனா்.
இதில் மழைநீா் சேகரிப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை முறையில் தண்ணீா் சுத்திகரித்தல், உயிா் உரங்கள் உள்ளிட்டவை குறித்து கண்காட்சியில் விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இயற்கை விவசாயிகள் கணேசன், ஜெயராமன், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.