காவல் துறை சாா்பில் கூட்டம்
By DIN | Published On : 09th November 2019 12:04 AM | Last Updated : 09th November 2019 12:04 AM | அ+அ அ- |

ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு, டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்துப் பேசினாா். ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வரவேற்றாா்.
ஆம்பூா் நகரின் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள், மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் நிா்வாகிகள், இஸ்லாமிய முக்கிய பிரமுகா்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ஆா். எஸ்.எஸ்., பாஜக, விஜயபாரத மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் ஆகியோருக்கு தனித் தனியாக காவல் துறை சாா்பில் கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும், அச்சக உரிமையாளா்கள், டிஜிட்டல் பேனா் அச்சடிப்பவா்கள் உள்ளிட்டோரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.