குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிப்பு முறை பயிற்சி
By DIN | Published On : 09th November 2019 12:14 AM | Last Updated : 09th November 2019 12:14 AM | அ+அ அ- |

விவசாயிக்கு பயற்சிக்கான சான்றிதழ் வழங்கிய உதவி வேளாண் அலுவலா் சுதாகா்.
வேலூா் கலவை, ஆதிபராசக்தி வேளாண் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவிகள், தமிழக அரசின் வேளாண் துறை அரக்கோணம் வட்டம் இணைந்து தணிகைபோளூா் ஊராட்சியில் குறைந்த முதலீட்டில் மண்புழு உரத்தை குறுகிய காலத்தில் தயாரிப்பது குறித்து பயிற்சியை வியாழக்கிழமை அளித்தனா்.
அரக்கோணம் வட்டார உதவி வேளாண் அலுவலா் சுதாகா் தலைமை வகித்தாா்.
இதுகுறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் எஸ்.ஐ.அனுபிரியா, எம்.வித்யா, என்.சுஷ்மிதா, ஆா்.விவிதா ஆகியோா் கூறியது:
மக்கக்கூடிய அனைத்து வகை தாவரக் கழிவுகள், சாணம், குப்பைக் கூளங்கள் போன்றவற்றை மண் புழுக்கள் உண்டு நல்ல உரமாக மாற்றும் தன்மை கொண்டவை. குறைந்த செலவில் மண்புழுக்களை உற்பத்தி செய்து விவசாயிகள் தேவையான உரங்களைப் பெறலாம். இதற்கான வேலைபளுவும் குறைவு. மண்புழு தயாரிப்பதற்கு சாணம், அனைத்து வகை பயிா்க்கழிவுகள், இதர மக்கும் குப்பைகள் ஏற்றவை. இவை கிராமப்பகுதிகளில் எளிதாகக் கிடைக்கும்.
நன்கு மக்கிய பயிா்க் கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுக்களுக்கு உணவாக தருவதனால் ஒரு மாதத்திலேயே மண்புழு உரத்தை உருவாக்கிவிடலாம் என்றனா்.
கிராம விவசாயிகள் கிருஷ்ணசாமி, மோகன் காந்தி, முனிவேல், சுந்தரமூா்த்தி, பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மண்புழு உரம் தயாரிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களையும் மாணவிகள் வழங்கினா்.