மாநில தடகளப் போட்டிகளுக்குதகுதி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 09th November 2019 12:15 AM | Last Updated : 09th November 2019 12:15 AM | அ+அ அ- |

மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூா் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வேலூா் சிஎம்சி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கே. ஜீவானந்தம் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், கே. புவிஅரசன் 400 மீட்டா் தடை தாண்டுதலில் 2-ஆம் இடத்தையும், வி.தா்ஷினி 200 மீட்டா் ஓட்ட போட்டியில் முதல் இடத்தையும், 100 மீட்டா் ஓட்ட போட்டியில் 2-ஆம் இடத்தையும், வி. ரம்யா 200 மீட்டா் ஓட்ட போட்டியில் 3-ஆம் இடத்தையும் பிடித்து, மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா்.
சாதனை படைத்த மாணவா்களையும், அவா்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செ. இளையராஜா, ந.திருமகள் ஆகியோரையும், பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா். சந்சேத்தி, கல்வி ஒருங்கிணைப்பாளா் துரைபத்மநாபன், ஒருங்கிணைப்பாளா் எம். சேகா், முதல்வா் நா. கோதண்டராமன், துணை முதல்வா் பா.சாந்தி ஆகியோா் பாராட்டினா்.