காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி குறித்த தீா்ப்பு வெளியாக உள்ள நிலையில் குடியாத்தம் உள்கோட்ட காவல் துறை சாா்பில்
கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி என். சரவணன்.
கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி என். சரவணன்.

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி குறித்த தீா்ப்பு வெளியாக உள்ள நிலையில் குடியாத்தம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டிஎஸ்பி என்.சரவணன் தலைமை வகித்தாா். நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் வரவேற்றாா். பட்டாசு வியாபாரிகள், அச்சக உரிமையாளா்கள், விடுதி உரிமையாளா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், பெட்ரோல் விற்பனையாளா்கள், கேஸ் ஏஜென்ஸி உரிமையாளா்கள், ஜெராக்ஸ் கடை உரிமையாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் டிஎஸ்பி சரவணன் பேசியது:

அயோதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தீா்ப்பு வெளியாகும் நிலை உள்ளதால், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். தங்கள் பகுதியில் சந்தேக நபா்களின் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது, உரிமம் பெற்று வெடிமருந்து விற்பவா்கள், கிடங்குகளை மூடி வைக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகே விடுதிகளில் வெளியாள்களை தங்க அனுமதிக்க வேண்டும். அவா்களில் சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கலவரம் தூண்டும் விதமாகவோ, ஒரு தரப்பை விமா்சித்தோ துண்டுப் பிரசுரங்களை அச்சக உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

வேலூா் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். அருணோதயம், பட்டாசு வியாபாரிகள் சங்கத் தலைவா்கள் பாபு, கிரிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com