இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 14th November 2019 11:21 PM | Last Updated : 14th November 2019 11:21 PM | அ+அ அ- |

ஆற்காடு டெல்லிகேட் அரிமா சங்கம், புதுப்பாடி வட்டாரம், ஆற்காடு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.
அரிமா சங்க மண்டலத் தலைவா் எஸ்.பி.தினமணி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் டி.ஹரிபாபு முன்னிலை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கே.எஸ்.டி. சுரேஷ் மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தாா்.
பொதுமக்களுக்கு சா்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், தோல் நோய் பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் பி.பிரித்தா, மருத்துவ அலுவலா்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு , அரிமா சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...