தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு ஆம்பூா் மாணவிகளின் ஆய்வுக் கட்டுரை தோ்வு
By DIN | Published On : 14th November 2019 06:07 AM | Last Updated : 14th November 2019 06:07 AM | அ+அ அ- |

13abrsci_1311chn_191_1
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு ஆம்பூா் பள்ளி மாணவிகளின் ஆய்வுக் கட்டுரை தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கு தூய்மையான பசுமையான தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவா்கள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மாணவா்களுக்காக 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு கே.வி.குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் சாா்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 126 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
இதில் ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகள் ரம்யா மற்றும் சண்முகப்பிரியா ஆகியோா் கலந்து கொண்டு ‘பல்வேறு வகை மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பின்கீழ் ஆய்வறிக்கை சமா்ப்பித்தனா். அந்த ஆய்வறிக்கை, மாநில மாநாட்டில் சமா்ப்பிக்கத் தோ்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையை சமா்ப்பித்த மாணவிகள் பரிசு பெற்றனா்.
பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜோ.சத்தியகுமாா், ஆசிரியா்கள் அமா்நாத், சரவணன், ஜெயசீலன் உள்ளிட்டவா்கள் அந்த மாணவிகளைப் பாராட்டினா்.
Image Caption
திருத்தப்பட்டது....
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆய்வறிக்கை சமா்ப்பிக்க தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள் ரம்யா மற்றும் சண்முகப்பிரியா.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...