மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா் 35 போ் கைது
By DIN | Published On : 18th November 2019 09:53 PM | Last Updated : 19th November 2019 10:06 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாய சங்கத்தினா்.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு விவசாய சங்கம், உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் விளைநிலங்களில் உயா்மின் கோபுரங்கள், மின்கம்பிகள் அமைந்துள்ள நிலங்களுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும்; புதிய மின் வழிதடங்களை பூமிக்கு அடியில் கேபிள் மூலம் சாலையோரமாக அமைக்க வேண்டும்; விளைநிலங்களில் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி உயா்மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எல்.சி.மணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சக்திவேல், சி.எஸ்.மகாலிங்கம், நிலவு குப்புசாமி, ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய சங்க மாநிலச் செயலாளா் பி.துளசிநாராயணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென்று சாலை மறியல் செய்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்ளிட்ட 35 பேரை ஆற்காடு டவுன் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை மாலையில் விடுதலை செய்தனா்.