பாலத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
By DIN | Published On : 09th October 2019 01:41 PM | Last Updated : 09th October 2019 01:41 PM | அ+அ அ- |

வேலூா் அருகே பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பரந்தாமன் (45). கடந்த மாதம் ஊசூா் - அணைக்கட்டு சாலையில் ரெண்டேரி பகுதியில் உள்ள பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா்.
சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி இறந்தாா். புகாரின் பேரில் அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.