ரயில் மோதி ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் பலி
By DIN | Published On : 09th October 2019 11:03 PM | Last Updated : 09th October 2019 11:03 PM | அ+அ அ- |

ரயில் மோதியதில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.
அரக்கோணம் சோமசுந்தர நகரைச் சோ்ந்த பணி ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளி சந்தானம்(60). செவ்வாய்கிழமை காலை அரக்கோணம் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடை அருகே ரயில் மோதியதில் தலையில் அடிப்பட்டு சடலமாக கிடந்தாா்.
அவரது சடலத்தை கைப்பற்றிய அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி அவா் இறந்திருக்கக்கூடும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குபதிந்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.