அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு செல்லிடப்பேசி
By DIN | Published On : 11th September 2019 06:29 AM | Last Updated : 11th September 2019 06:29 AM | அ+அ அ- |

நெமிலி வட்டாரத்தில் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு 163 செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நெமிலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெமிலி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிஏஎஸ் எனப்படும் பிரத்யேக மென்பொருள் கொண்ட செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு நெமிலி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். விழாவில் 163 அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு, செல்லிடப்பேசிகளை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் இருவரும் இணைந்து வழங்கினர்.
இவ்விழாவில் நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுரேஷ்செளந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், அதிமுக நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலர் ஏ.ஜி.விஜயன், மேற்கு ஒன்றியச் செயலர் அருணாபதி, நெமிலி பேருராட்சிச் செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.