அரசு கேபிள் டிவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
By DIN | Published On : 11th September 2019 06:34 AM | Last Updated : 11th September 2019 06:34 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணப்பாளராக அரக்கோணத்தைச் சேர்ந்த என்.ஷியாம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்போது மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து வருகிறது. விரைவில் உருவாக உள்ள ராணிபேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம், நெமிலி, வாலாஜாபேட்டை, ஆற்காடு ஆகிய 4 வட்டங்களை உள்ளடங்கிய பகுதிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அரக்கோணத்தைச் சேர்ந்த என்.ஷியாம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை என்.ஷியாம்குமாரிடம் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
ஷியாம்குமார், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு கேபிள்டிவிக்கு ஒளிபரப்பாளர்களை நியமிப்பது, மாத சந்தா பெறுதலைக் கவனிப்பது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைப்பார் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.