பேரிடர் கால பாதிப்புகளை முன்கூட்டி அறிய செயலி அறிமுகம்
By DIN | Published On : 11th September 2019 06:31 AM | Last Updated : 11th September 2019 06:31 AM | அ+அ அ- |

பேரிடர் கால பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான செயலியை பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதை வேலூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பேரிடர் காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக பசநஙஅதப எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் மழை அளவு, மழை வெள்ளம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள், அதன் வரைபடங்கள், இதர விவரங்கள் அடங்கியுள்ளன.
இச்செயலியை பொதுமக்கள் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் "கூகுள் ப்ளே' ஸ்டோரில் சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பசநஙஅதப செயலியில் தற்போது பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பருவமழை காலங்களில் மழைவெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், வெயில், மழை காலங்களில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் போன்ற பயனுள்ள தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, வேலூர் மாவட்டத்தில் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்துள்ளவர்கள் பசநஙஅதப செயலியை பதிவிறக்கம் செய்து அரசால் வழங்கப்படும் பேரிடர் கால முன்னறிவிப்புகள், மழை அளவு பாதிப்புகள் குறித்து தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.