மாவட்ட சிலம்ப போட்டிகளில் ஸ்ரீவிவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி
By DIN | Published On : 11th September 2019 06:32 AM | Last Updated : 11th September 2019 06:32 AM | அ+அ அ- |

வேலூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக வேலூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி குடியாத்தம் அபிராமி கலைக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் ஆம்பூர் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 மாணவர்கள் முதலிடமும், 6 மாணவர்கள் இரண்டாமிடமும், 5 மாணவர்கள் மூன்றாமிடத்தையும் வென்று வெற்றி பெற்றனர்.
முதலிடம் பிடித்த மோனிகா, பவானி, நந்தினி, மோனிகாஸ்ரீ, சுபலட்சுமி, ரமணா, பூர்ணவிஷ்வா, ராகுல், ஹரிஷ்குமார், கிஷோர், தினேஷ், விஷ்வா ஆகியோர் செப். 26 முதல் 28-ம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் எம். தீனதயாளன், முதல்வர் ஜி. நாகராஜன், துணை முதல்வர் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் கே. சக்கரபாணி, சிலம்பம் பயிற்சியாளர் டி. பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.