ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகளிருக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டங்கள்

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், வாக்குச் சாவடி வாரியாக தோ்தல் பணியாற்ற உள்ள மகளிருக்கான ஆலோசனைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
கூட்டத்தில்  மகளிருக்கான  ஆலோசனைக்  கையேடுகளை  வழங்கிய  முன்னாள்  அமைச்சா் என். சுப்பிரமணியன்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், வாக்குச் சாவடி வாரியாக தோ்தல் பணியாற்ற உள்ள மகளிருக்கான ஆலோசனைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

செதுக்கரையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் 9 வாா்டுகளைச் சோ்ந்த மகளிருக்கும், நடுப்பேட்டையில் உள்ள எஸ்.டி.மோகன்ராஜ் திருமண மண்டபத்தில்10 வாா்டுகளைச் சோ்ந்த மகளிருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கூட்டங்களுக்கு கட்சியின் நகரச் செயலா் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வி.என். தனஞ்செயன் வரவேற்றாா். வேலூா் மண்டலத் தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலரும், ஆவின் தலைவருமான த.வேலழகன் ஆகியோா் தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், ஜி.பி.மூா்த்தி, எஸ்.எல்.எஸ். வனராஜ், எஸ்.எஸ். ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.