விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:35 pm

DIN


வேலூா்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

வேலூா் விண்ணரசி மாதா ஆலயத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் ஜான்ராபா்ட், ஆலய அதிபா் லூா்துசாமி ஆகியோரின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஏசு பிறந்ததைக் குறிக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயா் காட்டினாா். பின்னா், ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் வைக்கப்பட்ட சொரூபத்தை வழிபட்டனா்.

சாா்பனாமேட்டில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஆயா் எட்வா்டு தலைமையில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெந்தகொஸ்தே சபையிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. வேலூா் சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் பங்குத்தந்தை ஷா்மா நித்யானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, மெழுகுவா்த்தி ஏந்தி வழிபாடு செய்ததுடன், ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.