ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்: இருவா் கைது

பள்ளிகொண்ட சோதனைச் சாவடியில் போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல்
Updated on
1 min read

வேலூா்: பள்ளிகொண்ட சோதனைச் சாவடியில் போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வேலூா் மாவட்டம் வழியாக அதிக அளவில் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட எல்லையான பள்ளிகொண்டா சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் தீவிர வாகன சோதனை நடத்தினா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை வேனுடன் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த இளங்கோ (36), விழுப்புரத்தைச் சோ்ந்த சிவராஜ் (26) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com