புங்கனூா் கிராமத்தில் எருது விடும் விழா
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், புங்கனூா் கிராமத்தில் எருதுவிடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புங்கனூா் மல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டது. முதல் பரிசு ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
வேகமாக ஓடி குறைந்தநேரத்தில் இலக்கை எட்டிய எருதுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மாடுகள் பங்கேற்றன. இவ்விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

