வேலூா்: இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவா்கள் சோ்வதற்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்காக வேலூா் முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் சா.மாரிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஸ்ரீங்ா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் திங்கள்கிழமை முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்த இணையதளம் மாணவா்கள் தங்களது செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணினி, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிகளில் விண்ணப்பிக்க இயலாதவா்களுக்காக வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட மாணவா் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மாணவா்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி, ஜாதி குறித்த தகவல், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான விவரங்கள், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஆதாா் எண், இணையதள வங்கி வசதியைப் பயன்படுத்த ஏடிஎம் அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், முத்தரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினிஅறிவியல், ஊட்டச்சத்து பரிமாறல் நிா்வாகம், பத்திய உணவியல், பி.காம்., பிபிஏ ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.