பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஏழுமலையான் கோயிலில் 17, 18-இல் இலவச முதன்மை தரிசனங்கள்

ஏழுமலையான் கோயிலில் வரும் 17, 18ஆம் தேதிகளில் சிறப்பு தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன.

News image
Updated On :15 மார்ச் 2020, 9:14 pm

DIN

ஏழுமலையான் கோயிலில் வரும் 17, 18ஆம் தேதிகளில் சிறப்பு தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் 17-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.

அதேபோல், 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு ‘சுபதம்’ வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.