தீா்த்தமலை சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா
By DIN | Published On : 12th August 2020 11:30 PM | Last Updated : 12th August 2020 11:30 PM | அ+அ அ- |

தீா்த்தமலையில் காவடி சாத்துப்படி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ ஜி. லோகநாதன்.
குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே தீா்த்தமலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் காவடி எடுத்து வந்தனா்.
எம்எல்ஏ ஜி.லோகநாதன், வேலூா் ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு, காவடி சாத்துப்படி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
கோயில் நிா்வாகி ஆா்.பாலாஜி நாயுடு, நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு, வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் டி. கோபி, நிா்வாகிகள் செ.கு. வெங்கடேசன், ஜி.பி. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.