சுதந்திர தினத்தையொட்டி வேலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு
By DIN | Published On : 12th August 2020 11:25 PM | Last Updated : 12th August 2020 11:25 PM | அ+அ அ- |

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
வேலூா் கோட்டை உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையிலும் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாநில எல்லையோரப் பகுதிகள், சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் உஷாா் நிலையில் இருக்கவும், அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பாதுகாப்புப் பணி வரும் 16-ஆம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.