கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலி
By DIN | Published On : 01st December 2020 12:28 AM | Last Updated : 01st December 2020 12:28 AM | அ+அ அ- |

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த (இடமிருந்து) நதியா, அவரது மகள்கள் அஸ்வினி, நிவேதா.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம், போடிப்பேட்டையைச் சோ்ந்தவா் யுவராஜ். மளிகைக் கடை ஊழியா். இவரது மனைவி நதியா (31). இவா்களின் மகள்கள் நிவேதா(10), அஸ்வினி (7). நிவா் புயல் காரணமாக பெய்த கனமழையால், மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளண்டன்யா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நதியா தனது மகள்களுடன் ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பாா்க்க திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளாா்.
நீரில் விளையாடியபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கினா். தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி 3 பேரின் சடலங்களையும் மீட்டனா்.
இது குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...