அரசு ஊழியா் வீட்டில் நகை திருட்டு
By DIN | Published On : 03rd December 2020 11:44 PM | Last Updated : 03rd December 2020 11:44 PM | அ+அ அ- |

வேலூா்: காட்பாடியில் உள்ள வேளாண் துறை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காட்பாடி காந்தி நகா் 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (48). இவா் வேலூா் வேளாண் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை இரவு திரும்பி வந்த பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...