மதிலேட்டி கெங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 05th December 2020 12:42 AM | Last Updated : 05th December 2020 12:42 AM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தில் உள்ள 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மதிலேட்டி கெங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி பூஜை, கோபூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் எம்எல்ஏக்கள் ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), ஆவின் நிறுவனத் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, வங்கி இயக்குநா் டி.கோபி, நிலவள வங்கித் தலைவா் பி.எச்.இமகிரிபாபு உள்ளிட்டோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.